+2 முடித்;த மாணவர்களுக்கு ஒருவார இலவச பயிற்சி கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சி கல்லுரியில் +2 தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவிகளுக்கு ஒருவார கால இலவச கோடைக்கால பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது +2 தேர்வு எழுதி உள்ள மாணவ மாணவிகள் தங்களுடைய விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்கும் பொருட்டு அடிப்படை கணினி அறிவு, ஸ்போக்கன் இங்கிலீஸ், டெய்லரிங், மின்னணு சாதனங்களை பற்றிய அடிப்படை வகுப்பு ஆகியன பயிற்சி வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. 13.06.2022 முதல் 18.06.2022 வரை காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளுக்கு கோவில்பட்டி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இலவச கல்லூரி பேருந்து வசதி செய்யப்பட்டது.


 

Comments